» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம்: பினராயி விஜயன் அறிவிப்பு!

புதன் 14, ஆகஸ்ட் 2024 5:43:57 PM (IST)

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், "வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75,000, 40 - 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ. 50,000 வழங்கப்படும். வீடுகளை இழந்து நிவாரண முகாம் மற்றும் உறவைனர்களின் தங்கியுள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும்.

இந்த நிவாரணங்கள் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச தங்கும் இடங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த இடங்களில் தங்க வாடகை வசூலிக்கப்படாது.

கல்வி சான்றிதழ், அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்டவை மீண்டும் வழங்க அனைத்து துறைகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. வாரிசு சான்றிதழ் இல்லாமல் இழப்பீட்டு தொகையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பலரும் காணாமல் போயுள்ளனர்.

நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக நிவாரணத் தொகைகளை வழங்க மத்திய அரசிடன் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory