» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம்: ஹிண்டன்பர்க் விடுத்த எச்சரிக்கை!

சனி 10, ஆகஸ்ட் 2024 5:07:41 PM (IST)

"விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கபோகிறது.." என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் அதானி குழு நிறுவனங்கள் மீது கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இதனிடையே தங்கள் குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது.

அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம்கோர்ட்டு செபி விசாரணை நடத்தினால் போதும் என கூறியது. உண்மையில் ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குழுமத்துக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கியது.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கபோகிறது.." என்று பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனம் குறித்த மோசடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory