» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சர்களின் துறைகள் அறிவிப்பு

செவ்வாய் 11, ஜூன் 2024 8:26:41 AM (IST)

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு பணியாளர்கள், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், அணுசக்தித் துறை, விண்வெளி துறை, அனைத்து முக்கியமான கொள்கைகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத மற்ற அனைத்து துறைகளும் அடங்கும். ராஜ் நாத் சிங் - பாதுகாப்பு அமைச்சர், அமித் ஷா - உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர், நிதின் ஜெய்ராம் கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். 

ஜகத் பிரகாஷ் நத்தா - சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர். சிவராஜ் சவுகான் சிங் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். நிர்மலா சீதாராமன் - நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர். ஜெய்சங்கர் சுப்ரமணியம் - வெளியுறவுத்துறை அமைச்சர். மனோகர் லால் - வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம் மற்றும் மின்துறை அமைச்சர். எச்.டி. குமாரசாமி - கனரக தொழில்துறை மற்றும் எஃகுத் துறை அமைச்சர். பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர். தர்மேந்திர பிரதான் - கல்வி அமைச்சர். ஜிதன் ராம் மஞ்சி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர். லாலன் சிங் என்கிற ஸ்ரீராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.

சர்பானந்தா சோனோவால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர். வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர். கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர். ஜுவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை அமைச்சர். அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர். ஜோதிராதித்யா சிந்தியா - தகவல் தொடர்பு, மற்றும் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர். 

பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர். கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர். அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர். கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர். ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர். மன்சுக் மாண்டவியா - வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர். கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர். சிராக் பாஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர். சி.ஆர்.பாட்டீல்- ஜல் சக்தி(நீர்வளம்) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory