» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மோடி மீண்டும் முதல்வராவார் என்று நிதிஷ் குமார் சொல்வது சரிதான் : தேஜஸ்வி யாதவ்
செவ்வாய் 28, மே 2024 8:49:19 AM (IST)
மோடி மீண்டும் முதல்வராவார் என்று நிதிஷ்குமார் சொல்வது சரிதான் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாடலிபுத்ரா தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார்,’ மோடி மீண்டும் முதல்வராக வாழ்த்துகிறேன்’ என்று அடுத்தடுத்து 2 முறை கூறினார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் உணர்த்த மீண்டும் தனது பேச்சை சரி செய்து மோடி மீண்டும் பிரதமராவார் என்று நிதிஷ்குமார் கூறினார்.
இந்த பேச்சுபற்றி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நிதிஷ்குமார் தனது மனதில் இருந்ததை வார்த்தையால் சொல்லி விட்டார். முதல்வர் கூறியது சரிதான். மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை. ஏனெனில் எங்கள் மரியாதைக்குரிய மாமா நிதீஷ் தனது இதயத்தில் இருந்து பாஜவை அகற்ற விரும்புவதை நாங்கள் அறிவோம். இதனால் பீகார் எந்த பாரபட்சமும் இல்லாமல் வளர்ச்சியடையும்.
நாங்கள் அவரது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது கிருஷ்ணர் சிறையில் பிறந்தவர். ஆனால் அவர் (பிரதமர்) இங்கு வந்து எங்களை சிறைக்கு அனுப்புவதாக மிரட்டுகிறார். அவர் நீதிமன்றத்திற்கு மேலே இருக்கிறாரா?. அப்படியானால் விசாரணை அமைப்புகள் அவருக்கு ஏற்ப செயல்படுகின்றன என்பதை இது நிரூபிக்கிறது. அவரது சர்வாதிகாரம். ஜூன் 4 வரை மட்டுமே நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்: காங்கிரஸ் கண்டனம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:27:17 PM (IST)

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின - பொதுமக்கள் அச்சம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:01:28 AM (IST)

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)

கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)

வாரணாசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்
சனி 15, பிப்ரவரி 2025 4:07:56 PM (IST)

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன் முறையாக ரூ.262 கோடி லாபம் ஈட்டி சாதனை!
சனி 15, பிப்ரவரி 2025 12:15:07 PM (IST)
