» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு!!

வியாழன் 2, மே 2024 12:43:47 PM (IST)



டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை நீக்கம் செய்து துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

விதிமுறையை மீறி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை பெறாமல் டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சுவாதி மாலிவாலால் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லி மகளிர் ஆணையத்தில் 223 பணிகள் புதிதாக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முறையில் ஊழியர்களை அப்போதைய தலைவர் சுவாதி மாலிவால் நியமனம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சுவாதி மாலிவாலால் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணையை நிறுத்தி வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் இந்தாண்டு உத்தரவிட்டது. இதற்கிடையே டெல்லி மகளிர் ஆணைய தலைவர் பதவியை ராஜிநாமா செய்த சுவாதி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory