» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வு கட்டாயமல்ல: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 12:15:27 PM (IST)



நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், நீட் தேர்வு, க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டார். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்: 

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 

மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கான பணி 2025ம் ஆண்டு தொடங்கப்படும். 

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகளை நிரப்புவோம். 

மனித கழிவுகளை மனிதரே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும் 

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

நாடு முழுவதும் சமூக, பொருளாதார சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவுபடுத்தப்படும்.

அரசியல் சாசன 8வது அமைப்பில் ஏனைய மொழிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.

நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், நீட் தேர்வு, க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசிகளிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory