» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிடிவாரண்ட் உத்தரவு எதிரொலி : நடிகை ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் சரண்!
புதன் 6, மார்ச் 2024 10:02:11 AM (IST)
தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே, சினிமா துறையிலிருந்து விலகிய ஜெயப்பிரதா 1994ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் ஜெயப்பிரதா மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ஜெயப்பிரதா 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் ஜெயப்பிரதா பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் விதியை மீறி ஒரு சாலையை திறந்து வைத்ததாக ராம்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ராம்பூரில் உள்ள கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயப்பிரதா நேரில் ஆஜராக கோர்ட்டு 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால். ஜெயப்பிரதா விசாரணைக்கு ஆஜராகாமல் தாமதித்து வந்தார்.
இதையடுத்து ஜெயப்பிரதாவை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்து கைது செய்து ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்யும்படி ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது. இதனால் ஜெயப்பிரதா கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










