» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்க மக்களை திரிணமூல் காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது:பிரதமர் மோடி விமர்சனம்

சனி 2, மார்ச் 2024 3:27:11 PM (IST)

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி முக்கியமல்ல. மக்களை, வறுமையின் பிடியில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதே அக்கட்சியின் விருப்பம் என்று  பிரதமா் மோடி விமர்சித்தார். 

மேற்கு வங்கம், நாடியா மாவட்டத்தில் இன்று(மார்ச்.2) நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, மாநிலத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு சமூக நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ரூ.22,000 கோடியிலான திட்டங்களை மக்களிடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கு வங்க மக்களை திரிணமூல் காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. மக்கள் தொடர்ச்சியாக அக்கட்சிக்கு வாக்களித்து வந்தனர். 

ஆனால், இந்த கட்சி, அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயராகிவிட்டது. திரிணமூல் காங். பெண்களை வெறும் வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. சந்தோஷ்காளி பெண்களின் குரல் மாநில அரசின் காதுகளில் விழவில்லை. மேற்கு வங்கத்தை பொருத்தவரை, இங்கு தாங்கள் எப்போது கைது செய்யப்பட வேண்டுமென்பதை குற்றவாளிகள் தான் தீர்மானிக்கின்றனர்.

அக்கட்சியைப் பொருத்தவரை, மேற்கு வங்கத்தின் வளர்ச்சி அவர்களுக்கு முக்கியமல்ல, மாறாக, ஊழல், துரோகமும் தான் அக்கட்சிக்கு முக்கியமானவை. மேற்கு வங்க மக்களை, வறுமையின் பிடியில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதே அக்கட்சியின் விருப்பம்.

மத்திய அரசு ஏழை மக்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியது. ஆனால், காங். அரசு மேற்கு வங்க மக்கள் மத்திய அரசின் இந்த நலத்திட்டத்தால் பயனடைய முடியாமல் தடுத்துள்ளது. 2014க்கு முன், மேற்கு வங்கத்தில், 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வந்தன. கடந்த 10 ஆண்டுகளில், இம்மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 26ஐ தொட்டு, கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன், கல்யாணி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானா மாவட்டம், சந்தேஷ்காளி பகுதி கிராமங்களில் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகியான ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததோடு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஷாஜஹான் உள்ளிட்டோருக்கு எதிராக அப்பகுதி பெண்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். 

இந்நிலையில், 55 நாள்களுக்கு பிறகு சந்தேஷ்காளியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் பாமன்புகுா் பகுதியில் பதுங்கியிருந்த ஷாஜஹான் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சந்தேஷ்காளி மக்களும் எதிா்க்கட்சிகளும் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும் ஷாஜஹான் கைது செய்யப்பட்டதில் ஏற்பட்ட தாமதத்தை பிரதமா் மோடி விமா்சித்துப் பேசியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory