» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!

திங்கள் 11, டிசம்பர் 2023 5:27:45 PM (IST)

ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன பாஜகவின் வாக்குறுதி என்னாயிற்று? என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொது விநியோக திட்ட விழாவில் பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமரின் இலவச ரேஷன் திட்டத்தை மறந்துவிடும் என்று கூறினார்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி இலவச ரேஷன் திட்டம் டிசம்பர் மாதத்திற்கு பிறகும் ஐந்தாண்டுகளுக்கு தொடரும். இதனால் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்தார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை விமர்சித்து மம்தா பானர்ஜி பேசியதாவது: "நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இலவச ரேஷன் அரிசி திட்டத்தை நீட்டிப்பது குறித்து அறிவித்துள்ளார். 

பாஜக ஆட்சிக்கு வராவிட்டால் அவரின் அறிவிப்பு செயல்படப்போவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தாலும்கூட இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் இந்த திட்டத்தையே மறந்துவிடுவார்கள். ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன பாஜகவின் வாக்குறுதி என்னாயிற்று? 

தேர்தலுக்கு முன்பாக மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து தேயிலைத் தோட்டங்களை மறு சீரமைத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதி தற்போது என்னவாயிற்று? பாஜக எப்போதும் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாது." என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory