» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சில கட்சிகளுக்கு மக்கள் மனங்களை வெல்ல தெரியவில்லை: பிரதமர் மோடி

சனி 9, டிசம்பர் 2023 4:52:23 PM (IST)

சில அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்கு முன்பு, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் உத்திரவாதங்கள், மக்களிடையே எதிரொலிக்கிறது என்பதை அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டும் வகையில் அமைந்திருந்தன.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், சில அரசியல் கட்சிகள் போலியான உத்தரவாதங்களை அளிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்வதில்லை.எங்கள் அரசு, அம்மா - பிள்ளை அரசு அல்ல, ஆனால், தாய்-தந்தை போன்ற அரசு. எவ்வாறு ஒரு குழந்தை தாய்-தந்தையை பார்த்துக்கொள்ளும் வகையில், மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு சேவை செய்யும் என்றும் அவர் கூறினார்.

ஏழைகளுக்காக மோடி அரசு செயல்படும், யாருக்கு எந்த ஆதரவும் இல்லையோ, எல்லா அலுவலக வாயில்களும் மூடப்பட்டதோ அவர்களுக்காக நாங்கள் வேலை செய்வோம். அவர்களுக்கு சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களை வழிபடவும் செய்வோம். என்னைப் பொறுத்தவரை அனைத்து ஏழைகளுமே எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்தான், அனைத்து தாய், மகள், சகோதரிகளும் எனக்கு முக்கியமானவர்கள்தான். ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு இளைஞரும் எனக்கு முக்கியமானவர்தான் என்று மோடி பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory