» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு: கடைக்காரர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 30, நவம்பர் 2023 5:29:52 PM (IST)
குஜராத்தில் ஆயுர்வேத சிரப் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் உள்ள நடியாட் டவுன் அருகே பிலோதரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் "கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா" என்கிற பெயரில் ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த சிரப் குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சிரப்பில் மிகவும் விஷத்தன்மை கொண்ட "மெத்தில் அல்கோஹால்" என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சிரப்பை உட்கொண்ட கிராமவாசி ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார். மேலும் அவர், "கடந்த இரண்டு நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு கடைக்காரர் 3பேரை கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










