» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல்: நடிகர்கள், பிரபலங்கள் ஓட்டுபோட்டனர்!
வியாழன் 30, நவம்பர் 2023 11:42:59 AM (IST)

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
தெலங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கியது. 119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி ஏறத்தாழ 8.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அவரது சகோதரி எம்எல்சி கவிதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கியதுமே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.தெலங்கானா முதல்வர் கேசிஆரின் மகளான கவிதா தனது வாக்கைப் பஞ்சாரா மலை தொகுதி வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.
அவர், "தெலங்கானா மக்கள் அனைவரும் முன்வந்து வாக்களைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வாக்குப் பதிவிட்டால்தான் எங்களைக் கேள்வி கேட்க முடியும். வாக்குப் பதிவு செய்தால், அரசியல்வாதிகளை பொறுப்போடு நடக்கச் செய்ய இயலும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தலைவர் கிஷன் ரெட்டி, வாக்குகளைப் பதிவு செய்யாமல் அரசியல் அமைப்பை விமர்சிக்க உரிமையில்லை. மக்கள் பணம், மது ஆகியவற்றுக்கு விலை போகாமல் பயமில்லாமல் வாக்களிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தங்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நாளில் வாக்குக் கேட்டதாகக் காங்கிரஸ் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










