» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் இடி - மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழப்பு: 71 கால்நடைகள் பலி!
திங்கள் 27, நவம்பர் 2023 5:54:28 PM (IST)
குஜராத்தில் மழையால், மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 71 கால்நடைகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரி தெரிவித்த தகவலின்படி, ஆமதாபாத், அம்ரேலி, ஆனந்த், கெடா, தேவபூமி துவாரகா, பஞ்சமஹால், படான், பொடாட், மெஹ்சானா, சபர்கந்தா, சூரத் மற்றும் சுரேந்திரநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தபி மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து இருவர் பலியாகியுள்ளனர்.பனஸ்கந்தா மற்றும் பருச் மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து தலா 3 பேரும், தாஹோத் மாவட்டத்தில் 4 பேரும் பலியானதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
குஜராத்தில் மின்னல் பாய்ந்து மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர், 23 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், காந்திநகர் மற்றும் கிர் சோம்நாத் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை 38 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூனாகத்தில் 35 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அமரேலியில் 13 மி.மீ மழை பதிவாகியுள்ளது.