» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கணவரின் காதை கடித்து துப்பிய மனைவி: குடும்பத் தகராறில் வெறிச்செயல்

திங்கள் 27, நவம்பர் 2023 5:51:01 PM (IST)

டெல்லியை சேர்ந்த 45 வயதான நபர், மனைவி தனது காதை கடித்து துண்டித்து துப்பியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது: நான் டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புரியில் வசித்து வருகிறேன். கடந்த 20-ந் தேதி காலையில் நான் வீட்டில் இருந்தேன். அப்போது எந்த காரணமும் இல்லாமல் எனது மனைவி என்னுடன் சண்டை போட்டார்.

அப்போது அவர் என்னிடம், 'நான் குழந்தையுடன் தனியாக வசிக்க விரும்புகிறேன். எனவே வீட்டை விற்று அதில் ஒரு பங்கு பணத்தை தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு நான் மறுத்து விட்டேன். மேலும் அவரை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்போது எங்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர் என்னை அடிக்க முயன்றார். இதனால் நான் அவரை பிடித்து தள்ளி விட்டேன்.

பின்னர் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர் எனது வலது காதை வேகமாக கடித்தார். நான் வலியால் அலறி துடித்தேன். அப்போதும் அவர் என்னை விடவில்லை. காதை கடித்து தனியாக துண்டித்து துப்பினார். இதனால் எனது வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து எனது மகன் என்னை மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றான். இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் மீது 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வேறு வழிகளில் காயப்படுத்துதல்) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு காதை மீண்டும் ஒட்டவைப்பதற்காக வேறொரு மருத்துவமனையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory