» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விஷப்பாம்பை கடிக்கச் செய்து மனைவி, மகளைக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 24, நவம்பர் 2023 5:24:38 PM (IST)
ஒடிசாவில் படுக்கை அறையில் விஷப்பாம்பை விட்டு மனைவி, மகளை கடிக்கச் செய்து கொன்ற கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(25), இவரது மனைவி பசந்தி பத்ரா(23). இருவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நிகழ்ந்துள்ளது. இவர்களுக்கு தெபஸ்மிதா என்ற இரண்டு வயது மகளும் உள்ளார். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்துள்ளது.
இதனிடையே கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக மனைவி, மகளை விஷப் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தந்தை புகாரளித்ததையடுத்து, கணேஷை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பாம்பாட்டியை சந்தித்து பூஜை செய்வதற்காக என்று கடுமையான விஷப்பாம்பை கணேஷ் வாங்கியுள்ளார். இதையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி மனைவி, மகள் படுத்திருந்த அறையில் பாம்பை விட்டு, இவர் மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். மறுநாள் மனைவியும், மகளும் இறந்து விட்டனர் என்று கணேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட கணேஷை போலீஸார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










