» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மெட்ரோ முதல் கிரிக்கெட் வரை காவிமயமாக்க முயற்சி : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

வெள்ளி 24, நவம்பர் 2023 11:21:20 AM (IST)

மெட்ரோ ரெயில் நிலையங்கள் முதல் கிரிக்கெட் அணி வரை நாடு முழுவதும் காவி மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பல்வேறு வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்துள்ள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதையும் சாடியுள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-மத்தியில் ஆளும் அரசு இன்னும் 3 மாதங்கள் கூட நீடிக்கும். தற்போது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் மத்திய விசாரணை அமைப்புகள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை குறி வைத்து பாயும்.

மத்திய பா.ஜனதா அரசு இடஒதுக்கீட்டை ஒழிக்க விரும்புகிறது. ஆனால் நான் அதை உறுதியாக எதிர்ப்பேன்.சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டையும் பா.ஜனதா எதிர்க்கிறது. ஆனால் அதை ஓ.பி.சி ஒதுக்கீடுக்கு கீழ் கொண்டு வருவோம். மெட்ரோ ரெயில் நிலையங்கள் முதல் கிரிக்கெட் அணி வரை நாடு முழுவதும் காவி மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கிரிக்கெட்டில் வெற்றி பெற்றிருப்போம் காவி என்பது தியாகிகளின் வண்ணம். ஆனால் நீங்கள் போகிகள்.

காவி உடைக்கு கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் பயிற்சியில் மட்டும் காவி அணிந்து விட்டு போட்டியில் அணிவதில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ஆமதாபாத்துக்கு பதிலாக மும்பை அல்லது கொல்கத்தாவில் நடத்தப்பட்டிருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்கும்.

உலகக் கோப்பையில் பாவிகள் கலந்து கொண்ட ஒரு போட்டியைத் தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணியினர் வெற்றி பெற்றனர்.நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்து விட்டது.வங்கித்துறை மந்தமான நிலையில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. வேலையில்லா திண்டாட்ட விகிதம் மிகவும் உயர்ந்து உள்ளது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory