» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணம் தர மறுத்த வாலிபரை குத்திக்கொன்று வெறியாட்டம் போட்ட சிறுவன் கைது

வெள்ளி 24, நவம்பர் 2023 11:12:10 AM (IST)

டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பணம் தர மறுத்த வாலிபரை குத்திக்கொன்று வெறியாட்டம்  போட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் கடந்த 21-ந் தேதி இரவு 10.30 மணி அளவில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க வாலிபரை சிறுவன் ஒருவன் வெறித்தனமாக கத்தியால் குத்திக்கொண்டிருந்தான். மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து மக்கள் பயந்து கதவை பூட்டிக்கொண்டனர்.

பிறகு அந்த சிறுவன் அங்கிருந்து சென்றபிறகு பொதுமக்கள் ஓடிவந்து வாலிபரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கொலை கொடூரமாக நடந்திருப்பது தெரியவந்தது.

அந்த வீடியோ ஆதாரத்துடன் போலீசார் கொலையாளியை பிடித்தனர். அவன் 16 வயது சிறுவன் என விசாரணையில் தெரியவந்தது. அருகில் உள்ள பகுதியைச்சேர்ந்த அவன் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியிருந்ததும், குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தான என்பதும் தெரிகிறது. கொலை நடந்த அன்று அந்த தெருவில் குடிபோதையில் நின்றிருந்த சிறுவன், அந்த வழியாக வந்த ஜாப்ராபாத் பகுதியைச்சேர்ந்த வாலிபரிடம் பிரியாணி சாப்பிட ரூ.350 கேட்டுள்ளான். 

அவர் தர மறுக்கவே சிறுவன் அவரது கழுத்தைப்பிடித்து நெரித்துள்ளான். இதில் வாலிபர் மயங்கி சரிந்தார். பின்னர் சிறுவன் அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளி கத்தியால் சரமாரியாக குத்தினான். சினிமாவில் வரும் சைக்கோ வில்லன் போன்று குத்திக்கொண்டே இருந்தான். அப்போது அந்த வழியாக வருவோரை பார்த்து சைகையால் "இங்கே வரவேண்டாம்” என கூறினான். இதனால் யாரும் அருகில் செல்லவில்லை. 

இதற்கிடையே சிறுவன் ஒருகட்டத்தில் கத்திக்குத்தை நிறுத்திவிட்டு, எழுந்து ஆட்டம் போட்டான். பின்னர் காலால் அந்த வாலிபரை எட்டி உதைத்தான். பிறகு மீண்டும் அவரை 60 முறைக்கு மேல் அவன் கத்தியால் குத்தியிருக்கிறான். இந்த காட்சிகள், பார்ப்பதற்கு மிகக்கொடூரமாக இருந்தன. போலீசாரே திகைத்து விட்டனர். சமூக வலைத்தளங்களிலும் இது பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சிறுவனை கைது செய்து அவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory