» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 24, நவம்பர் 2023 10:18:34 AM (IST)

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. முதல் நாளே பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையில் குவியத் தொடங்கினர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.

இந்நிலையில் சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிச.8, ஜன.12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச.24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன.7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன.10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன.14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31, ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17, 24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory