» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொழில்நுட்பக் கோளாறு: சுரங்கத்தில் துளையிடும் பணி தற்காலிக நிறுத்தம்!
வியாழன் 23, நவம்பர் 2023 12:49:08 PM (IST)

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டுவந்த சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக அமெரிக்காவின் ஆக்கர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 51 மீட்டர் துளையிட வேண்டிய நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 45 மீட்டருக்கு துளையிடப்பட்டிருந்தது. தொடர்ந்து கிடைமட்டத் துளையிடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே சுரங்கத்தில் கான்கிரீட் மோதியதில் துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மீட்புப் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சம் இன்று பிற்பகலுக்குள் தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திட்டமாக, பா்கோட் பகுதியில் இருந்தும் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதையில் உள்ள தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க உள்ளே ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இடிபாடுகள் வழியாக 6 அங்குல குழாய் மூலம் தொழிலாளா்களுக்கு கூடுதல் உணவுகள், மருந்துகள், அத்தியாவசிய உடைகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










