» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம்! கூகுள் பே பயனர்களுக்கு எச்சரிக்கை!
வியாழன் 23, நவம்பர் 2023 10:53:17 AM (IST)
கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உலகில் மிக பிரபலமான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை(யுபிஐ) செயலிகளில் ஒன்று கூகுள் பே. இந்நிலையில் கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் பே செயலியில், சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளைக் கண்டறிய கூகுளின் சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்புடன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் கூகுள் பே செயலியில் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு, சில செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மொபைல் போன், கணினி, லேப்டாப் என எந்த சாதனத்திலும் கூகுள் பே செயலில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, திரை பகிர்வு செயலிகள்(screen sharing apps) அனைத்தையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது. இது உங்கள் சாதனத்தின் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். உங்களின் டெபிட் கார்டு, வங்கிக் கணக்கு தகவல்களை எடுத்துக்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, ஸ்க்ரீன் ஷேர்(Screen Share), எனி டெஸ்க்(AnyDesk), டீம் வியூவர்(TeamViewer) உள்ளிட்ட திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த செயலிகள் பயன்பாட்டில் இல்லாததை உறுதி செய்துகொள்ளுமாறும் கூறியுள்ளது. மேலும் இதுபோன்று திரை பகிர்வு செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறோ பயன்படுத்துமாறோ கூகுள் செயலிகளில் எச்சரிக்கை அறிவிப்பு வராது என்றும் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










