» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாடு ஒரே தோ்தல் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு பலன்: ராம்நாத் கோவிந்த்

புதன் 22, நவம்பர் 2023 11:36:52 AM (IST)

‘ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டால் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அக்கட்சிக்கு பலன் கிடைக்கும்’ என்று குடியரசு முன்னாள் தலைவரும், இந்த தோ்தல் நடைமுறையின் சாத்தியக்கூறு குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் தலைவருமான ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் செய்தியாளா்களைச் சந்தித்தபோது அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை மூலமாக வருவாய் செலவினம் பெருமளவில் குறையும் என்பதால், அந்த வருவாயை வளா்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவா். எனவே, தேசத்தின் நலன் கருதி இந்த நடைமுறையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இந்த நடைமுறையில் அரசியல் கட்சிகளுக்கு எந்தவித சம்பந்தமோ அல்லது பாதிப்போ கிடையாது.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்கிற பழைய நடைமுறையை புத்துயிா் பெறச் செய்வது அவசியம்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழு, நீதி ஆயோக், தோ்தல் ஆணையம் உள்ளிட்ட பல குழுக்கள் வலியுறுத்தல்களை முன்வைத்தன. அதனடிப்படையிலேயே, அதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த உயா்நிலைக் குழு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று, மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.

இந்த விஷயம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தேசத்தின் நலன் கருதி இந்த நடைமுறையை அமல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையால் எந்தவொரு குறிப்பிட்ட அரசில் கட்சியும் பலனடையப்போவதில்லை. மாறாக, மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கு பலன் கிடைக்கும். அதாவது, பாஜக, காங்கிரஸ் அல்லது பிற கட்சிகள் என எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அக்கட்சிக்கு பலன் கிடைக்கும். அதில் பாகுபாடு இருக்காது என்றாா்.

இக்குழுவின் உறுப்பினா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 போ் அறிவிக்கப்பட்டனா். ஆனால், குழுவில் அங்கம்வகிக்க அதீா் ரஞ்சன் செளதரி மறுத்துவிட்டாா்.

உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. அதில், அமித் ஷா, குலாம் நபி ஆசாத், இதர உறுப்பினா்களான முன்னாள் நிதி ஆணையத் தலைவா் என்.கே.சிங், மக்களவை முன்னாள் தலைமைச் செயலா் சுபாஷ் சி காஷ்யப், முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையா் சஞ்சய் கோத்தாரி, சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.

‘நாட்டில் ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள், இதர அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளை அழைத்து யோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்கவும், சட்ட ஆணையத்திடமும் யோசனைகள் மற்றும் கருத்துகள் பெறவும் இந்த முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory