» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரசில் இணைந்த நடிகை விஜயசாந்திக்கு முக்கிய பதவி

ஞாயிறு 19, நவம்பர் 2023 9:06:10 AM (IST)



காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்த  நடிகை விஜயசாந்திக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. 

தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி, பா.ஜனதாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகினார். பின்னர் நேற்று முன்தினம் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. 

அதன்படி சட்டசபை தேர்தல் நடைபெறும் தெலுங்கானாவில் கட்சியின் பிரசாரக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக விஜயசாந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த நியமனத்தை செய்திருப்பதாக பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

நடிகை விஜயசாந்தியை தலைவராக கொண்ட இந்த கமிட்டிக்கு மேலும் 15 மூத்த தலைவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்றிருந்த நடிகை விஜயசாந்தி மீண்டும் காங்கிரசில் ஐக்கியமாகி இருப்பது தெலுங்கானாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து

நடிகையின் போதாதா காலம்Nov 19, 2023 - 12:15:24 PM | Posted IP 172.7*****

காங்கிரஸ் மூழ்கும் கப்பல். காங்கிரஸ் என்ற சாக்கடையில் சேர்ந்து விட்டார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory