» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏமனில் மரண தண்டனைக்கு எதிரான கேரள நர்சின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

வெள்ளி 17, நவம்பர் 2023 5:29:34 PM (IST)

மரண தண்டனையை எதிர்த்து கேரள நர்சின் மேல் முறையீட்டு மனுவை மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (33). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். 

இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ம்ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். ஏமனுக்கு செல்ல தனக்கு அனுமதி வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இதனால் நர்சு நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து

இந்தியன்Nov 17, 2023 - 09:34:40 PM | Posted IP 162.1*****

இங்குள்ள ஏமன் நாட்டவர்களை அடித்து துரத்தி விடுங்கள். திருந்தாத நாடு. இந்திய கடற்படை வீரர்கள் கூட விட்டு வைக்கவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory