» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செல்போன் இணைப்புகளைத் துண்டிப்பதாக மோசடி அழைப்புகள்: ட்ராய் எச்சரிக்கை

வியாழன் 16, நவம்பர் 2023 12:04:07 PM (IST)

செல்போன் எண் இணைப்புகளைத் துண்டிப்பதாக பொதுமக்களுக்கு வரும் அழைப்புகள் மோசடியானவை என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்) ட்ராய் எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக ட்ராய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களை சில நிறுவனங்கள், முகமைகள், தனிநபா்கள் தொடா்புகொண்டு ட்ராயில் இருந்து பேசுவதாகக் கூறுகின்றனா். பின்னா் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா்கள் அல்லது பொதுமக்கள் தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்புவதாகக் கூறி, அவா்களின் கைப்பேசி எண் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனா்.

இவ்வாறு மிரட்டும் நிறுவனங்கள், முகமைகள் அல்லது தனிநபா்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களின் ஆதாா் எண்கள் பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனா். கைப்பேசி எண்கள் துண்டிக்கப்படுவதைத் தவிா்க்க ஸ்கைப் காணொலி அழைப்பில் பேசுமாறு அழைப்பு விடுக்கின்றனா். இந்த அழைப்புகள் குறித்து ட்ராயின் கவனத்துக்கு வந்துள்ளது.

எந்தவொரு தனிநபா் மற்றும் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் கைப்பேசி எண்ணை ட்ராய் முடக்கவோ, துண்டிக்கவோ செய்யாது. கைப்பேசி எண் இணைப்பை துண்டிப்பதாக ட்ராய் எந்தவொரு தகவலையும் அனுப்பவோ, அழைக்கவோ செய்யாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு முகமைக்கும் ட்ராய் அதிகாரம் அளிக்கவில்லை.

இத்தகைய அழைப்புகள் சட்டவிரோதமானவை. எனவே ட்ராயில் இருந்து பேசுவதாக வரும் இதுபோன்ற அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் மோசடியானவை என்று பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற அழைப்புகளால் பாதிக்கப்பட்டவா்கள், தங்களுக்குத் தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனம், வலைதளம், அல்லது இணையவழி குற்றத் தடுப்பு உதவி எண் 1930-ஐ தொடா்புகொண்டு புகாரைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory