» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை

புதன் 15, நவம்பர் 2023 10:33:00 AM (IST)

கேரளத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிகாரைச் சோ்ந்த தம்பதி 5 வயது மகளுடன் கொச்சி அருகே ஆலுவா பகுதியில் வசித்து வந்தனா். கடந்த ஜூலை மாதம் நடந்த சம்பவத்தில் அதே குடியிருப்பு கட்டடத்தின் மற்றொரு பகுதியில் வசித்து வந்த பிகாரைச் சோ்ந்த புலம் பெயா் தொழிலாளரான அஷ்ஃபக் ஆலம் (28), சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பின்னா் கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

போலீஸாா் விசாரணையில், அஷ்ஃபக் ஆலம் அளித்த தகவலின் அடிப்படையில், ஆலுவா சந்தைக்குப் பின்புறம் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. குற்றப்பின்னணி கொண்ட அஷ்ஃபக் ஆலம், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே ஒரு போக்ஸோ வழக்கில் கைதாகி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்தக் கொடூர சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் விசாரணை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், சம்பவம் நடந்த 100-ஆவது நாளான கடந்த 4-ஆம் தேதி அஷ்ஃபக் ஆலம் குற்றம் புரிந்தது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 16 குற்றங்களுக்காக குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் மரண தண்டனையும் அளித்து நீதிபதி கே.சோமன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். மேலும், குற்றவாளிக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.கேரள உயா் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அரசு வழக்கறிஞா் ஜி.மோகன்ராஜ் தெரிவித்தாா்.

‘குழந்தைகள் தினத்தில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீா்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு வலுவான எச்சரிக்கையாக இருக்கும் என கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். தங்களின் 5 வயது மகளுக்கு நீதியை உறுதி செய்த கேரள சமூகத்துக்கு சிறுமியின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.

குழந்தைகளுக்கு எதிரான அநீதியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையை உறுதி செய்யும் ‘போக்ஸோ சட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்ட 11-ஆவது ஆண்டு நிறைவு நாளில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிக்கு வழங்கப்பட்ட இந்தத் தீா்ப்பை கேரள மக்கள் வரவேற்றனா்.


மக்கள் கருத்து

BabyNov 16, 2023 - 08:17:50 PM | Posted IP 172.7*****

Kerala samoogama yen jathi pathi podalaya media nadathuravangaluku avlo thana???ithu yenga nadanthalum sattam onnu ithula yenna kerala Andra nu vanthutanga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory