» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீர் ஏரி படகு வீடுகளில் தீ விபத்து: 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலி

ஞாயிறு 12, நவம்பர் 2023 2:55:15 PM (IST)



ஜம்மு காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் உள்ள படகு வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 5 படகுகள் எரிந்து சாம்பலாயின.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. படகு வீடு என அழைக்கபடும் தங்கும் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்து தால் ஏரியின் அழகை கண்டு ரசிப்பார்கள்.சுற்றுலா பயணிகளின் பெரும் விருப்பமான காட் எண் 9 க்கு அருகில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஒரு படகில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அருகிலுள்ள மற்ற தங்கும்படகுகளில் மற்றும் பிற மரக் குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன.

நேரு பூங்கா, பட்மாலூ மற்றும் கவ்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயை கட்டுப்படுத்தும் முன் ஐந்து தங்கும்படகுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மர குடியிருப்புகள் இந்த சம்பவத்தில் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கருகி உயிரிழந்தனர்.

எரிந்த படகுகளின் இடிபாடுகளில் இருந்து, அடையாளம் காண முடியாத அளவிற்கு சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகுகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெப்பமூட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்கும் படகுகள் சம்பந்தப்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமான நைஜீன் ஏரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏழு படகு வீடுகள் எரிந்து சாம்பலாயின. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory