» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஷ்மிகா போலி விவகாரம் : மெட்டாவிடம் விவரங்களைக் கேட்டுள்ளது டெல்லி காவல்துறை!

சனி 11, நவம்பர் 2023 4:43:50 PM (IST)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொலி வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது.

இப்போது டெல்லி காவல்துறை அந்தப் போலிக் காணொலியை, வலைதளத்தில் பகிர்ந்த நபரின் சமூக வலைதளக் கணக்கின் யூஆர்எல் தரவுகளை வழங்குமாறு மெட்டா நிறுவனத்திடம் கேட்டுள்ளது இதுகுறித்து அதிகாரி ஒருவர் 'ராஷ்மிகாவின் போலி காணொலி பரவலாக பகிரப்பட்டுள்ளது. அது எந்தக் கணக்கிலிருந்து வலைதளத்தில் முதன்முதலாக பகிரப்பட்டது என்பதைக் கண்டறிவதற்காக மெட்டா நிறுவனைத்தை தொடர்புகொண்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

மேலும் போலி விபரங்களைத் தயாரித்தல் (சட்டப்பிரிவு 465), நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலி விபரங்களைப் பகிர்தல் (சட்டப்பிரிவு 469)  ஆகிய குற்றங்களின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி சிறப்பு காவல்துறை பிரிவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66சி மற்றும் 66இ ஆகிய பிரிவிகளின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே டெல்லி மகளிர் ஆணையம் இந்த காணொலி தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காணொலி செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் - இந்தியப் பெண் ஒருவரது காணொலியில் அவரது முகத்தை செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா முகமாக மாற்றியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory