» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பையில் டோல்கேட்டில் நின்ற கார்கள் மீது வேகமாக மோதியதில் 3பேர் உயிரிழப்பு!
வெள்ளி 10, நவம்பர் 2023 10:39:03 AM (IST)

கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த கார்கள் மீது வேகமாக மோதியதில் 3பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஊர்லி நகரில் இருந்து பாந்திரா நோக்கி நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. பாந்திரா-ஊர்லி சி லிங்க் சாலையில் உள்ள டோல்கேட்டுக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த கார்கள் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










