» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்!
வியாழன் 9, நவம்பர் 2023 4:09:45 PM (IST)
கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மற்றும் குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய முவரும் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் வெளியிட்டாா்.மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு நவம்பர் 6-ஆம் தேதி கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.
இந்த மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முறைப்படி பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக அதிகரிக்கும். உச்சநீதிமன்றம் அதன் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










