» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
புதன் 8, நவம்பர் 2023 4:51:27 PM (IST)
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓராண்டு பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கின் இன்றைய விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, எதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, 'பயிற்சி பெற்றுள்ள அர்ச்சகர்கள் ஆகம விதிகளை படித்தவர்கள்தான் நியமனம் செய்யப்படுகிறார்கள். மேலும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய அரசு சார்பில் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது' என்று தமிழக அரசு கூறியது.
இன்றைய விசாரணை முடிவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்று கூறி இந்த வழக்கு ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










