» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்: பெண்கள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கோரினார் நிதீஷ்!

புதன் 8, நவம்பர் 2023 4:08:59 PM (IST)

தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பெண்கள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

பிகார் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று (செவ்வாய்க் கிழமை) சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு முதல்வர் நிதீஷ்குமார் பேசினார். அப்போது ,'படித்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும்பட்சத்தில், கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும். பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். பிகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளது. 

இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. முன்பு பிகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது' என்று பேசினார். இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பெண்கள் கல்வி முக்கியம் என்று பேசிய நிதீஷ் குமாரின் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் நிதீஷ் குமாரை பாஜக எம்எல்ஏக்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், 'நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory