» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகை ராஷ்மிகா மந்தனா போலி விடியோ விவகாரம்: மத்திய அரசு எச்சரிக்கை

செவ்வாய் 7, நவம்பர் 2023 4:58:54 PM (IST)

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி விடியோ விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. ‘புஷ்பா’ படத்தில் நடித்த ராஷ்மிகா இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்ததுடன் அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. தமிழில் வாரிசு படத்தின் மூலமும் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்றார்.

அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார். ‘குட்ஃபை’ எனும் இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 2வது ஹிந்திப்படமாக சித்தார்த் மல்லோத்ராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகாவின் மார்பிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று கடந்த சில நாள்களாக இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதற்கு ராஷ்மிகா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ராஷ்மிகாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற போலி விடியோக்களை சித்தரிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்கள் மார்பிங் செய்வது எப்போதும் இருந்துவரும் அருவறுக்கதக்க செயலாக இருந்தாலும் தற்போது முற்றிலும் உண்மையாக இருப்பது போல போலியான ஒன்றினை உருவாக்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி இப்படியான தீயப் பழக்கங்களுக்கு உபயோகிக்கப்படக்கூடாதென இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory