» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்: குஜராத், தெலுங்கானாவில் 2 பேர் கைது!
ஞாயிறு 5, நவம்பர் 2023 10:32:47 AM (IST)
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை குஜராத், தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி. மும்பை வால்கேஷ்வரில் உள்ள அண்டிலா என்ற ஆடம்பர அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ந்தேதி முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. பணம் தரவில்லை எனில் முகேஷ் அம்பானியை சுட்டுக்கொலை செய்து விடுவேன் என மர்மநபர் இ-மெயிலில் மிரட்டல் விடுத்து இருந்தார்.
கொலை மிரட்டல் இ-மெயில் குறித்து மும்பை காவ்தேவி போலீசில் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல மறுநாளில் மீண்டும் இ-மெயில் மூலம் ரூ.200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை 3-வது தடவையாக இ-மெயிலில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை மர்மநபர் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தார். 8 நாட்களில் 3-வது தடவையாக வந்த இ-மெயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் இந்த இ-மெயில் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் 2 வேறுபட்ட இ-மெயிலில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதில் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்தும், மற்றொன்று குஜராத்தில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தெலுங்கானா விரைந்த மும்பை போலீசார் அம்மாநில போலீசாரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மிரட்டல் இ-மெயில் அனுப்பிய கணேஷ் வன்பார்தி(வயது19) என்ற வாலிபரை பிடித்து கைது செய்தனர். இதேபோல குஜராத்தில் இருந்து இ-மெயிலில் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷதாப் கான்(21) என்ற வலிபரையும் கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










