» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய நன்கொடையாளர் பட்டியல்: ஷிவ் நாடார் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம்!
வெள்ளி 3, நவம்பர் 2023 5:28:36 PM (IST)
நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி வரை நன்கொடை அளித்து, இந்திய நன்கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை எடெல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,042 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 78 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கல்வி தொடர்பான காரணங்களுக்காக ரூ.1,774 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.376 கோடி நன்கொடை அளித்து 3வது இடத்தில் உள்ளார்.ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ரூ.287 கோடி நன்கொடை அளித்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி 2022-ம் ஆண்டிலிருந்து கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்து தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளா
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










