» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு : ஒய்.எஸ். ஷர்மிளா
வெள்ளி 3, நவம்பர் 2023 5:15:31 PM (IST)
தெலங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரஸுக்கு தங்களது ஆதரவை வழங்குவதாக தெரிவித்த ஷர்மிளா, கே.சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சியை அகற்றுவதற்காகவே காங்கிரஸுக்கு ஆதரவளிக்கிறது.ஒய்எஸ்ஆர் தெலங்கானா தொண்டர்கள் அனைவரும் இந்த முடிவுவை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் நவ.30 ஆம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், டிச.3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
முன்னாள் முதல்வர் ராஜசேகரின் மகளும், ஆந்திரம் முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டிக்காக தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தார், பின்னர் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியைத் தொடங்கினார்.
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும் என்பதால் தொடர்ந்து டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே. வி.பி.ராமச்சந்திரராவ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










