» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு : பள்ளிகள் மூடப்பட்டன
வெள்ளி 3, நவம்பர் 2023 4:45:40 PM (IST)
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன. பெட்ரோல், டீசல் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை அது மிகவும் மோசடைய, மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் லோதி சாலை, ஜஹான்கிர்புரி, ஆர்.கே. புரம், விமான நிலையம்(டி3) பகுதிகளில் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசு அளவிடு இந்த பகுதிகளில் முறையே 438, 491, 486 மற்றும் 473 எனப் பதிவாகியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் முக்கியத்துவம் இல்லாத கட்டட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள விவசாய இடங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், சாதகமற்ற வானிலை நீடிப்பதாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மோசமான நிலையில்தான் இருக்கும் என வல்லுனர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளர். மருத்துவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










