» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் 97% ரூ. 2,000 நோட்டுகள் திரும்பியுள்ளன: ரிசர்வங்கி தகவல்!

வியாழன் 2, நவம்பர் 2023 10:19:58 AM (IST)

நாட்டில் புழக்கத்தில் இருந்த 97 சதவீதத்துக்கும் அதிகமான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்தது.

செலாவணி மேலாண்மை நடவடிக்கையின்கீழ், ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் பின்னா் அக்டோபா் 7 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தக் கால நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட ரிசா்வ் வங்கி, ‘அக்டோபா் 7-ஆம் தேதிக்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்க நோட்டுகளாக தொடரும். ஆனால், ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே இந்த நோட்டுகளைச் சமா்ப்பித்து, வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும். தபால் மூலமாகவும் ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி, வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். 

அரசுத் துறைகள் வரம்பு ஏதுமின்றி 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பிற வங்கிக் கிளைகளில் வைப்போ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியாது’ என்று கூறியது. இந்த நிலையில், தற்போது வரை 97 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில், ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

அவற்றில், அக்டோபா் 31-ஆம் தேதி வரை 97 சதவீதத்துக்கும் அதிகமான நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. மேலும், ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பியோ மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory