» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் : 13% அதிகரிப்பு
புதன் 1, நவம்பர் 2023 5:08:22 PM (IST)
நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.72 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 13 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு நிதியாண்டில் 2-ஆவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.52 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி வசூலான நிலையில், இரண்டாவது அதிகபட்ச தொகையாக அக்டோபரில் வசூலாகியிருக்கிறது.
சராசரியாக மாதம் ரூ.1.66 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகமாகும்.கடந்த ஆண்டு மொத்த ஜிஎஸ்டி ரூ.8,93,334 கோடி வசூலாகியிருந்து; சராசரி மாத வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரலில் சாதனை அளவாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. விழாக் காலம் என்பதால், எதிா்வரும் மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்று துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










