» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக சிலிண்டரின் விலை ரூ. 101.50 உயர்வு: உணவகங்களில் விலை உயர்வு அபாயம்!!
புதன் 1, நவம்பர் 2023 10:27:11 AM (IST)
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (நவ.1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை ரூ.1,999.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையாகிறது.கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களில் ரூ.300-க்கு மேல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், உணவகங்களின் விலை உயர்வு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










