» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செல்போனை ஒட்டுக்கேட்பது திருடர்கள் செயல் : ராகுல் காந்தி கண்டனம்
செவ்வாய் 31, அக்டோபர் 2023 5:19:03 PM (IST)
செல்போன்களை ஒட்டுக்கேட்பது குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல் என ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது "எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல்.ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். ஏகபோக முதலாளிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம். வழக்கமாக மோடி, அமித்ஷாவைதான் நம்பர் ஒன், நம்பர் 2 என்று சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பவர் அதானிதான்.
அதானிக்காகவே மோடியும், அமித்ஷாவும் வேலை செய்கிறார்கள். அதானி அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பிரச்சினைகளை திசை திருப்ப மத்திய அரசு இது போன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










