» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முகேஷ் அம்பானிக்கு 3வது மூன்றாவது மின்னஞ்சல்: ரூ.400 கோடி கேட்டு கொலை மிரட்டல்!

செவ்வாய் 31, அக்டோபர் 2023 12:47:52 PM (IST)

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், 3வது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர்  முகேஷ் அம்பானிக்கு வந்த மூன்றாவது கொலை மிரட்டல் மின்னஞ்சலில், ரூ.400 கோடி கொடுக்காவிட்டால், முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், தற்போது எனது தேவை ரூ.400 கோடியாக மாறியுள்ளது. காவல்துறையினரால் என்னை கண்டுபிடிக்கவும் முடியாது, கைது செய்யவும் முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் வந்த இமெயில் ஐடியின் ஐபி முகவரி விவரங்களுக்காக பெல்ஜியத்தில் உள்ள விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (விபிஎன்) நிறுவனத்தை இண்டர்போல் மூலம் மும்பை காவல்துறையினர் நாடியுள்ளனர். முதற்கட்ட தகவலில், மிரட்டல் மின்னஞ்சல் பெல்ஜியத்தின் விபிஎன்-லிருந்து வந்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் உலகின் வேறொரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, பெல்ஜியத்தின் விபிஎன்-ஐ பயன்படுத்தியிருக்கலாம் என்றும் மும்பை காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கடந்த வாரம் முகேஷ் அம்பானிக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.  அதில் 'நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கிறார்கள்' என்று அதில் குறிப்பிட்டிருந்தது.இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரிய வந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் பிரிவு 387, 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பிறகு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மூன்றாவது மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory