» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 31, அக்டோபர் 2023 12:29:28 PM (IST)

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செப். 9-ஆம் தேதி கைது செய்தனா். தற்போது அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ளார். 

ஏற்கனவே மூன்று முறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்து  விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory