» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு: எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

திங்கள் 30, அக்டோபர் 2023 5:42:08 PM (IST)



கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது என்று மத்திய அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று என பரவலாக அழைக்கப்பட்ட, 2019 டிசம்பரில் சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தாக்குதல், 2020 முழுவதும் உலகையே உலுக்கியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு, 3 வெவ்வேறு காலகட்டங்களில் பெருமளவில் அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது. 

ஆனால், 2022லிருந்து 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட பலர் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்த செய்திகள் சில மாதங்களாக வெளி வந்தன. இதற்கிடையே, நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 15 தொடங்கி அக்டோபர் 24 வரை தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரபலமான 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கார்பா கொண்டாட்டங்களின் போது 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கோவிட் பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதில், கரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்தி கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இவ்வாறு மாண்டவியா எச்சரித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory