» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செல்போன் பறிப்பின்போது பிடெக் மாணவி பலி : குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸ்!
திங்கள் 30, அக்டோபர் 2023 12:42:01 PM (IST)
செல்போன் பறிப்பு சம்பவத்தின் போது 19 வயது பிடெக் மாணவி பலியான நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வெள்ளிக்கிழமை, கைப்பேசி பறித்தபோது, ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பிடெக் மாணவி பலியான நிலையில், இன்று காலை, குற்றவாளியை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். குற்றவாளியை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது, காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்குக் காவல்துறையினர் திருப்பிச் சுட்டத்தில் குற்றவாளி பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கீர்த்தி சிங் என்ற பிடெக் மாணவி, தனது தோழிகளுடன் கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, குற்றவாளி ஜீதேந்திரா, கைப்பேசியை பிடுங்கும்போது, கீர்த்தி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி கீர்த்தி பலியானதால், காவல்துறையினர் ஜீதேந்திராவை தேடிவந்தனர்.
திங்கள்கிழமை காலை, காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் சென்றுகொண்டிருந்த ஜீதேந்திராவை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ஜீதேந்திராவை காவல்துறையினர் திருப்பிச் சுட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர். வழிப்பறிப்பு, கொள்ளை என ஜீதேந்திரா மீது 12 வழக்குகள் இருந்ததும், அவர் 2020 மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










