» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு!
திங்கள் 30, அக்டோபர் 2023 11:23:44 AM (IST)
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.இந்தநிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கேரளா விரைந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










