» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திரா ரயில் விபத்தில் 13பேர் உயிரிழப்பு: தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

திங்கள் 30, அக்டோபர் 2023 10:26:40 AM (IST)



ஆந்திராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும், படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரயில் சென்றது. அந்த ரயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்- பாலசா பயணிகள் ரயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.

அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13  ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory