» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் பத்திரிகையாளர் மீது அத்துமீறல்: சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு
ஞாயிறு 29, அக்டோபர் 2023 10:23:27 AM (IST)
பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறியதாக நடிகர் சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி, தமிழில் ‘நிரபராதி', ‘கற்பூர முல்லை', ‘தீனா', ‘சமஸ்தானம்', ‘ஐ', ‘தமிழரசன்' படங்களில் நடித்துள்ளார். சினிமா தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் களமிறங்கினார். அதில் தோல்வி அடைந்தார்.இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுரேஷ் கோபியிடம், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், திருச்சூரில் மீண்டும் போட்டியிடுவது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பெண் நிருபர் ஒரு கேள்வி எழுப்பியபோது, அவரது தோள்பட்டையை பிடித்து சுரேஷ் கோபி பதில்அளித்தார்.இதனால் பதறி போன அந்த பெண் சற்று பின்வாங்க, மீண்டும் அவரது தோள்பட்டையை சுரேஷ் கோபி பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நிருபர் சுரேஷ் கோபியின் கையை தட்டிவிட்டார்.
சுரேஷ் கோபியின் இந்த நடவடிக்கை குறித்து கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் கோபி கூறும்போது, ‘அந்த பெண் செய்தியாளர், என் வழியை மறைத்து நின்றதால், அவரை அங்கிருந்து நகர்த்த முயன்றேன். ஒரு தந்தையாக, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்’ என்றார்.சுரேஷ் கோபி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை தொட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










