» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போர்நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியது அவமானகரமானது: பிரியங்கா காந்தி!

சனி 28, அக்டோபர் 2023 12:36:47 PM (IST)

"இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியது  இதுவரை நிலைநிறுத்திய உயர்ந்த கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் மற்றும் காஸா பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டுவரப்பட்ட ஜோர்டானிய வரைவு தீர்மானத்தின் மீது ஐ.நா.பொதுச்சபையில் வாக்களிப்பதை இந்தியா வெள்ளிக்கிழமை புறக்கணித்தது. 

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பொதுச்சபையில் 120 நாடுகள் போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு ஒதுங்கியிருப்பது எனக்கு அதிர்ச்சியும், வெட்கமும் அளிக்கிறது” என்று கூறியுள்ளார். 

மேலும், "நமது நாடு அகிம்சை தத்துவத்தால் உருவானது. சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை வழிநடத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு.  ஆனால், மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், மின்சாரம் ஆகியவை பல லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுவதையும், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது இந்தியா இதுவரை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்திய உயர்ந்த கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory