» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்து: பெண்கள் உட்பட 13 பேர் பலி
வியாழன் 26, அக்டோபர் 2023 3:36:41 PM (IST)
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்கள், குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர்..
ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் உட்பட 14 பேர் காரில் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த இவர்கள் தசரா விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரம் மாவட்டத்தில் பகேபள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இதனால் கார் டிரைவருக்கு சாலை சரியாக தெரியவில்லை.அப்போது சாலையின் ஓரம் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதன் மீது கார் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 பேர் இறந்தனர். இந்த கோரமான விபத்தில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர். ஒருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










