» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாஸ்ஃபேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வியாழன் 26, அக்டோபர் 2023 11:23:16 AM (IST)
நடப்பு ராபி பருவத்தில் பாஸ்ஃபேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில் (2023 அக்.1 முதல் 2024 மாா்ச் 31 வரை) யூரியா அல்லாத உரங்களுக்கான மானிய விலையை நிா்ணயிக்கும் உரத் துறையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு மலிவு விலையில் போதிய அளவு உரம் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில், நடப்பு ராபி பருவத்தில் பாஸ்ஃபேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு மானியமாக ரூ.22,303 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டை-அமோனியம் பாஸ்ஃபேட் உர மூட்டை ரூ.1,350 என்ற பழைய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாஷியம் உர மூட்டை ரூ.1,470 என்ற பழைய விலையிலும், சிங்கிள் சூப்பா் பாஸ்ஃபேட் உர மூட்டை ரூ.500-க்கும் வழங்கப்படும். மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (பொட்டாஷியம் கிளோரைட்) உர மூட்டையின் விலை ரூ.1,700-இல் இருந்து ரூ.1,655-ஆக குறையும் என்று தெரிவித்தாா்.
2023-24-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்தில் பாஸ்ஃபேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.38,000 கோடி மானியம் வழங்க கடந்த மே மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த ஜூலையில் இந்தியா-ஜப்பான் இடையே செமிகண்டக்டா் விநியோக முறையில் ஒத்துழைப்பு நிலவுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










